Friday, August 2, 2024

ஆடி மூன்றாம் வெள்ளி

 வெட்டுவானம்

 அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில்

நாள் :- 02.08.2024

 


 சிம்ம வாகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி


                உலகம் முழுவதுமுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களில் ஒன்றாகவும் வேலூர் மாவட்டத்தின் எல்லை நகர பகுதியான வெட்டுவானம் பாலற்றின் தென்கரையில் அமைந்துள்ள எழில்மிகு நகரமான வெட்டுவானம் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களை காக்கும் அம்மனாகவும் எல்லையைகாக்கும் எல்லையம்மனாகவும் கிராமத்தை காக்கும் கிராம தேவதையாகவும் வீற்றிருக்கும் அருள்மிகு  எல்லையம்மன் திருக்கோயிலில் ஆடி மூன்றாம் வெள்ளியன்று அம்மனுக்கு  அதிகாலை 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் எல்லையம்மனுக்கு சந்தனகாப்பும் விதவிதமான மலர்கள் கொண்டு அலங்காரமும் செய்திருந்தனர். தொடர்ந்து எல்லையம்மனுக்கு 1008 நாமாவதி  அர்சனை, அன்னை தமிழில் அர்சனை தீப தூப ஆராதணைகளும் நடந்தேறியது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அன்னையை வழிபட்டனர். 



               இதனையடுத்து உற்சவர்  எல்லையம்பாளுக்கு ஆடி மூன்றாம் வெள்ளி சிறப்பு அலங்காரமாக சிம்ம வாகினி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும்,  அதிகாலையிலேயே அம்மனை தரிசிக்க வருகை தந்திருந்த 1000க்கணக்கான பக்தர்களுக்கு நீண்ட நேரம்  வரிசையில் காத்திருந்து எல்லையம்மனை தரிசித்து வருகின்றனர் மேலும் திருக்கோயில் மூலம் பக்தர்களுக்கு குடிநீர், பிரசாதங்கள் வழங்கபட்டது.

            காலை 9.00 மணிக்கு திருக்கோயிலில் செயல்படும் கோசாலையில் பசுக்களுக்கு கோபூஜையும் இனிதே நடைபெற்றது. இதில் கலந்து கொண்டா பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை கோமாதாவிடம் வைத்து வழிபட்டனர்.

                நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற திருக்கோயில் அருகாமையில் உள்ள குலக்கரையிலும், மற்ற இடங்களிலும் பெங்கல் வைத்தும் ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.  இதனை தொடர்ந்து இன்று இரவு 10.00 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெறவுள்ளது.

           ஆடிவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன், கணக்காளர் சரவண பாபு மற்றும் மணியம் முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


வீடியோ தொகுப்பு கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்



புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பு:-

தமிழரசன்.ம


No comments:

Post a Comment