இராஜ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளியன்று எல்லையம்மனுக்கு அதிகாலை 5.00 மணிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற் இராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
அம்மன் திருவீதியுலா
இரவு நாகவாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற்ற காட்சி
முதல் வெள்ளியன்று இரவு சுமார் 11.00 மணியளவில் இராஜ அலங்காரத்தில் அலங்கரிக்க அம்பாளை சப்பரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நாக வாகனத்தில் ஏற்றி முக்கிய வீதிகலான பஜார் வீதி, இரயில்ரோடு தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பேட்டை வீதி, கோவிந்தம்பாடி தெரு, இராஜஜீ வீதி,குமரன் தெரு, பஜனைகோயில் தெரு, உள்ளிட்ட வீதிகள் வழியாக அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் மற்றும் கணக்காளர் சரவணபாபு மணியம் முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
புகைப்படம் மற்றும் செய்தி தொகுப்பு :-
தமிழரசன்.ம
No comments:
Post a Comment