Friday, August 16, 2024

ஆடி 4ம் வெள்ளி

வெட்டுவானம் எல்லையம்மன் திருக்கோவில் 


பார்வேட்டை அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில்.  மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற  கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம்‌ பிரம்மேற்சவ விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். 

     


ஆடி பிரம்மேற்சவ திருத்தேர் விழாவிற்கு திருதேர் ஊற்சவத்திற்கு புறப்பட்ட காட்சி.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சிறப்பு யாகசாலை பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பிரம்மேற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. தினமும் அம்பாள் ஒவ்வொரு நாளும் இரவு சிம்ம வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், கிளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.


இந்த நிலையில்  பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான ஆடி 4ம் வெள்ளியன்று திருதேரோட்டம் நடந்தது. இதில் அருள்மிகு எல்லையம்மனுக்கு பார்வேட்டை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருக்கோவிலிலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அம்பாளை திருத்தேரின் மீது ஏற்றப்பட்ட‌ பின்னர் அம்பாள் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.


திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்களின் காட்சி

மேலும் 100க் கணக்காண பக்தர்கள் திருதேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். பக்தர்கள் திருதேரின்‌ மீது கோவிந்த கோவிந்த முழக்கத்துடன் மிளகு, உப்பு உள்ளிட்டவைகளை தேர் மீது தூவி வணங்கி வருகின்றனர். திருத்தேர் வெட்டுவானம் பகுதியில் உள்ள முக்கிய மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மாலை 6.30 மணிக்கு தேர் நிலையை வந்தடையும். தேர் செல்லும் வழியெங்கும் பழச்சாறு, தண்ணீர், மோர் ஆகியவற்றை பக்தர்களுக்கு கொடுத்தனர்.



திருத்தேர் திருவிழா வீடியோ தொகுப்பு



வீடியோ மற்றும் புகைப்படம் தொகுப்பு

தமிழரசன்.ம 

No comments:

Post a Comment