Saturday, August 3, 2024

ஆடி பிரம்மோற்சவ கொடியேற்றம்

அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில்
03-08-2024


பிரம்மோற்சவ கொடியேற்றுவிழா

            பள்ளிகொணடாவை அடுத்த வெட்டுவாணம் பகுதியில் அமைந்து அருள்மிகு எல்லையம்மன் திருக்கோவிலில் ஆடிவெள்ளி பெருவிழா நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள். அதில் பலர் இங்கேயே தங்கி தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.



            இந்தநிலையில் ஆடி மூன்றாம் வெள்ளி அடுத்த நாள் வரும் சனிக்கிழமை அன்று பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ கொடியேற்று விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. 



பிரம்மோற்சவ கொடியேற்று விழாவின் காட்சிகள்

            இதனை தொடர்ந்து அடுத்த 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் எல்லையம்மன் ஒவ்வொரு விதமான வாகனங்களை திருவீதி உலா உற்சவம் நடைபெறும் முதல் நாளான இன்று இரவு உற்சவர் எல்லையம்மன் சிறப்பு அலங்காரத்தில் 'காமதேனு' வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதியுலா சென்ற காட்சி


            நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு சிம்ம வாகனத்தில் வீதிஉலா, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு பூத வாகன திருவீதிஉலா, 6-ந்தேதி இரவு நாக (சேஷ) வாகன வீதிஉலா, 7-ந்தேதி இரவு அன்ன (ஹம்ச) வாகன வீதிஉலா, 8-ந்தேதி இரவு யானை (கஜ) வாகன வீதிஉலா, 9-ந்தேதி திருத்தேர் விழா, 10-ந்தேதி இரவு குதிரை (அஸ்வ) வாகன வீதிஉலா நடக்கிறது. 11-ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு, 12-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை பிரம்மோற்சவ கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.

புகைப்படம் மற்றும் தொகுப்பு :- 

தமிழரசன்.ம

No comments:

Post a Comment