வெட்டுவானம் எல்லையம்மன்
தபசு காமாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி
வெட்டுவானம் எல்லையம்மன் திருக்கோவிலில் முதல் நாள் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக 15.08.2024 இரவு 8.30 மணியளாவில் திருக்கோயில் திருக்குளத்தில் நடைபெற்றது.
தெப்ப உற்வசத்திற்கு புறப்படும் முன்பு மேற்கொள்ளபட்ட சிறப்பு பூஜை காட்சி
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு எல்லையம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளி துவங்கி தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
தெப்ப உற்சவத்திற்கு அம்பாள் மேலதாளங்கள் முழங்க புறப்பட்ட காட்சி
அதன்படி ஆடி ஐந்தாம் வாரம் வியாழன் கிழமை துவங்கி சனிக்கிழமை வரை தெப்ப உற்சவம் நடைபெறும் இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் இன்று துவங்கியது மேலும் முதல் நாள் நாள் தெப்ப உற்சவம் 3 சுற்றுகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தெப்பத்தில் ஏற்றப்பட்ட அம்பாளுக்கு தீப ஆராதணைகள் காட்டப்பட்ட காட்சி
முதல்நாள் தெப்ப உற்சவத்திற்காக அம்மனுக்கு தபசு காமாட்சி அலங்காரம் செய்யப்பட்டு திருக்கோயிலில் இருந்து வலமாக கொண்டு வரப்பட்ட அம்பாளை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பிரதிஷ்டை செய்து திருக்குளத்தில் 3 சுற்றுகள் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
தெப்ப உற்சவம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட காட்சி
இதனை அடுத்து தெப்ப உற்சவத்தில் இருந்து அம்பாள் ஊர்வலமாக தாலாட்டு ஆட்டம்போட்டு திருக்கோயிலுக்கு கொண்டு சென்றனர் இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தெப்ப உற்சவம் முடிந்ததும் தாலாட்டு ஆட்டம்போட்டு அம்பாளை கொண்டுவந்த காட்சி
மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயலர் அலுவலர் நடராஜன் மற்றும் பரந்தாமகண்ணன் கணக்காளர் சரவண பாபு மணியம் முரளி செய்திருந்தனர். பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
No comments:
Post a Comment