Sunday, August 18, 2024

2ம் நாள் தெப்ப உற்சவம்

வெட்டுவானம் எல்லையம்மன் திருக்கோயில்

மாவடி சேவை அலங்காரத்தில்  அம்பாள் அருள்பாலித்த காட்சி


        வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு எல்லையம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளி துவங்கி தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.


        அதன்படி ஆடி ஐந்தாம் வாரம் வியாழன் கிழமை துவங்கி சனிக்கிழமை வரை தெப்ப உற்சவம் நடைபெறும் அதன்படி இந்த ஆண்டிற்கான இரண்டாம் நாள் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


இரண்டாம் நாள் தெப்ப உற்சவத்திற்காக அம்மனுக்கு மாவடி சேவை அலங்காரம் செய்யப்பட்டு திருக்கோயிலில் இருந்து வலமாக கொண்டு வரப்பட்ட அம்பாளை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பிரதிஷ்டை செய்து திருக்குளத்தில் 5 சுற்றுகள் தெப்ப உற்சவம் நடைபெற்றது.



இதனை அடுத்து தெப்ப உற்சவத்தில் இருந்து அம்பாள் அங்கீகரிக்கப்பட்ட புஷ்ப பள்ளத்தில் ஏற்றப்பட்டு திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டனர். 


மேலும்  விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயலர் அலுவலர் நரசிம்மமூர்த்தி கணக்காளர் சரவண பாபு மணியம் முரளி செய்திருந்தனர்.  பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும்  குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.





Friday, August 16, 2024

ஆடி 5ம் வார வியாழன்

 வெட்டுவானம் எல்லையம்மன்


தபசு காமாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி

வெட்டுவானம் எல்லையம்மன் திருக்கோவிலில் முதல் நாள் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக 15.08.2024 இரவு 8.30 மணியளாவில் திருக்கோயில் திருக்குளத்தில் நடைபெற்றது.

தெப்ப உற்வசத்திற்கு புறப்படும் முன்பு மேற்கொள்ளபட்ட சிறப்பு பூஜை காட்சி

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு எல்லையம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளி துவங்கி தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.


தெப்ப உற்சவத்திற்கு அம்பாள் மேலதாளங்கள் முழங்க புறப்பட்ட காட்சி

அதன்படி ஆடி ஐந்தாம் வாரம் வியாழன் கிழமை துவங்கி சனிக்கிழமை வரை தெப்ப உற்சவம் நடைபெறும் இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் இன்று துவங்கியது  மேலும் முதல் நாள் நாள் தெப்ப உற்சவம் 3 சுற்றுகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.


தெப்பத்தில் ஏற்றப்பட்ட அம்பாளுக்கு தீப ஆராதணைகள் காட்டப்பட்ட காட்சி

முதல்நாள் தெப்ப உற்சவத்திற்காக அம்மனுக்கு தபசு காமாட்சி அலங்காரம் செய்யப்பட்டு திருக்கோயிலில் இருந்து வலமாக கொண்டு வரப்பட்ட அம்பாளை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பிரதிஷ்டை செய்து திருக்குளத்தில் 3 சுற்றுகள் தெப்ப உற்சவம் நடைபெற்றது.


தெப்ப உற்சவம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட காட்சி

இதனை அடுத்து தெப்ப உற்சவத்தில் இருந்து அம்பாள் ஊர்வலமாக தாலாட்டு ஆட்டம்போட்டு  திருக்கோயிலுக்கு கொண்டு சென்றனர் இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டனர். 


தெப்ப உற்சவம் முடிந்ததும் தாலாட்டு ஆட்டம்போட்டு அம்பாளை கொண்டுவந்த காட்சி

மேலும்  விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயலர் அலுவலர் நடராஜன் மற்றும் பரந்தாமகண்ணன் கணக்காளர் சரவண பாபு மணியம் முரளி செய்திருந்தனர்.  பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும்  குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


வீடியோ மற்றும் போட்டோ தொகுப்பு
தமிழரசன்.ம

ஆடி 4ம் வெள்ளி

வெட்டுவானம் எல்லையம்மன் திருக்கோவில் 


பார்வேட்டை அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில்.  மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற  கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம்‌ பிரம்மேற்சவ விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். 

     


ஆடி பிரம்மேற்சவ திருத்தேர் விழாவிற்கு திருதேர் ஊற்சவத்திற்கு புறப்பட்ட காட்சி.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சிறப்பு யாகசாலை பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பிரம்மேற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. தினமும் அம்பாள் ஒவ்வொரு நாளும் இரவு சிம்ம வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், கிளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.


இந்த நிலையில்  பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான ஆடி 4ம் வெள்ளியன்று திருதேரோட்டம் நடந்தது. இதில் அருள்மிகு எல்லையம்மனுக்கு பார்வேட்டை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருக்கோவிலிலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அம்பாளை திருத்தேரின் மீது ஏற்றப்பட்ட‌ பின்னர் அம்பாள் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.


திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்களின் காட்சி

மேலும் 100க் கணக்காண பக்தர்கள் திருதேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். பக்தர்கள் திருதேரின்‌ மீது கோவிந்த கோவிந்த முழக்கத்துடன் மிளகு, உப்பு உள்ளிட்டவைகளை தேர் மீது தூவி வணங்கி வருகின்றனர். திருத்தேர் வெட்டுவானம் பகுதியில் உள்ள முக்கிய மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மாலை 6.30 மணிக்கு தேர் நிலையை வந்தடையும். தேர் செல்லும் வழியெங்கும் பழச்சாறு, தண்ணீர், மோர் ஆகியவற்றை பக்தர்களுக்கு கொடுத்தனர்.



திருத்தேர் திருவிழா வீடியோ தொகுப்பு



வீடியோ மற்றும் புகைப்படம் தொகுப்பு

தமிழரசன்.ம 

Saturday, August 3, 2024

ஆடி பிரம்மோற்சவ கொடியேற்றம்

அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில்
03-08-2024


பிரம்மோற்சவ கொடியேற்றுவிழா

            பள்ளிகொணடாவை அடுத்த வெட்டுவாணம் பகுதியில் அமைந்து அருள்மிகு எல்லையம்மன் திருக்கோவிலில் ஆடிவெள்ளி பெருவிழா நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள். அதில் பலர் இங்கேயே தங்கி தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.



            இந்தநிலையில் ஆடி மூன்றாம் வெள்ளி அடுத்த நாள் வரும் சனிக்கிழமை அன்று பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ கொடியேற்று விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. 



பிரம்மோற்சவ கொடியேற்று விழாவின் காட்சிகள்

            இதனை தொடர்ந்து அடுத்த 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் எல்லையம்மன் ஒவ்வொரு விதமான வாகனங்களை திருவீதி உலா உற்சவம் நடைபெறும் முதல் நாளான இன்று இரவு உற்சவர் எல்லையம்மன் சிறப்பு அலங்காரத்தில் 'காமதேனு' வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதியுலா சென்ற காட்சி


            நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு சிம்ம வாகனத்தில் வீதிஉலா, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு பூத வாகன திருவீதிஉலா, 6-ந்தேதி இரவு நாக (சேஷ) வாகன வீதிஉலா, 7-ந்தேதி இரவு அன்ன (ஹம்ச) வாகன வீதிஉலா, 8-ந்தேதி இரவு யானை (கஜ) வாகன வீதிஉலா, 9-ந்தேதி திருத்தேர் விழா, 10-ந்தேதி இரவு குதிரை (அஸ்வ) வாகன வீதிஉலா நடக்கிறது. 11-ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு, 12-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை பிரம்மோற்சவ கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.

புகைப்படம் மற்றும் தொகுப்பு :- 

தமிழரசன்.ம