ஆடி இரண்டாம் வெள்ளி அம்மன் அலங்காரம்
26.07.2024
வெட்டுவானம் எல்லையம்மன்
திருவாரூர் கமலாமாம்பிகை அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ஆடி மாதம் 2-ம் வெள்ளியன்று எல்லையம்மனுக்கு அதிகாலை 5.00 மணிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு திருவாரூர் கமலாமாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் மற்றும் கணக்காளர் சரவணபாபு மணியம் முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
புகைப்படம் மற்றும் செய்தி தொகுப்பு :-
தமிழரசன்.ம
No comments:
Post a Comment