Sunday, July 28, 2024

முத்தங்கி சேவை

 ஆடி இரண்டாம் வெள்ளி அடுத்த ஞாயிற்றுகிழமை 

28.07.2024

வெட்டுவானம் எல்லையம்மன்


28.07.2024 ஆடி 2ம் ஞாயிறு அம்மன் சிறப்பு முத்தங்கி சேவை அலங்காரத்தில் காட்சியத்த காட்சி

                உலகமெல்லாம் காக்கும் ரேனுகா பரமேஸ்வரி வேலூர் மாவட்டத்தின் எல்லை நகரமாக அமையப்பெற்ற வெட்டுவானத்தில் எழுந்தருளி உலக மக்களை எல்லையைகாக்கும் அம்மனாகா இருந்து காக்கும் எல்லையம்மன் திருக்கோயிலில் இன்று அதிகாலை சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் துங்கியது. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தவுடன் அம்பாளுக்கு பிரதிஸ்டை செய்யபட்ட கலசத்தை திருக்கோயிலை வலமாக கொண்டுவந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஹேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் எல்லையம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்ட பின்னர் சிறப்பு அர்சனை துாபதீப ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்நது பக்கதர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கபட்டனர்.

          அதேபோல் ஊர்சவர் அம்பாளுக்கு சிறப்பு முத்தங்கி சேவை அலங்காரம்  செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் மற்றும் கணக்காளர் சரவணபாபு மணியம் முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஆடி இரண்டாம் ஞாயிறு வெட்டுவானம் எல்லையம்மன் திருக்கோயில் வீடியோ தொகுப்பு கீழே காணலாம்



புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பு

தமிழரசன்.ம

Friday, July 26, 2024

திருவாரூர் கமலாமாம்பிகை

ஆடி இரண்டாம் வெள்ளி  அம்மன் அலங்காரம்

26.07.2024

வெட்டுவானம் எல்லையம்மன்


திருவாரூர் கமலாமாம்பிகை அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி

 

        வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ஆடி மாதம் 2-ம் வெள்ளியன்று எல்லையம்மனுக்கு அதிகாலை 5.00 மணிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

        தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு திருவாரூர் கமலாமாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.


விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் மற்றும் கணக்காளர் சரவணபாபு மணியம் முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


புகைப்படம் மற்றும் செய்தி தொகுப்பு :-

தமிழரசன்.ம

Sunday, July 21, 2024

ஆடி முதல் வெள்ளி அடுத்த ஞாயிறுக்கிழமை அம்மன் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு யாகசாலை பூஜை

 வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாக அமைந்துள்ள வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு அதிகாலை சிறப்பு யாகசாலை பூஜை மற்றும் அம்மனுக்கு சந்தனகாப்பு சாத்தப்பட்டது தொடர்ந்து உற்சவர் அம்பாளுக்கு சிறப்பு ராஜ அலங்காரம் செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு விடப்பட்டது.


 வீடியோ தொகுப்பு :- 

DSLR Photography Vellore.

தமிழரசன் .ம

வெட்டுவானம்.


Friday, July 19, 2024

ஆடி முதல் வெள்ளி அன்று அருள்மிகு எல்லையம்மன் இராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி

 

வேலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

ஆடி வெள்ளியை முன்னிட்டு அதிகாலையில் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை. 

அதிகாலையிலேயே அம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள். நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து வருகின்றனர்.