தன் கணவரின் உத்தரவுப்படி, தன் தலையைக் கொய்த பரசுராமர், மீண்டும் தனக்கு உயிர் கொடுத்தபோது அருந்ததிப் பெண் ஒருத்தியின் தலையைத் தன் உடம்பில் மாற்றிப் பொருத்திவிட, அந்த உருவிலேயே மாரியம்மனாக மாறினாள் ரேணுகாதேவி. அப்படி தாயின் தலையை வெட்டிய இத்தலம், வெட்டுவாணம் என்றானது. புண்ணிய தீர்த்தமான கசக்கால்வாயை வெட்டியபோது நீரோடு வந்த ஒரு சிலை மீது மண்வெட்டி பட்டு உதிரம் பெருகியது. வெட்டிய விவசாயி உடனே அருள் வந்து ஆடினான். ‘நானே எல்லையம்மன்’ என்றான். அம்மனுக்கு உடனேயே கோயில் எழுப்பினார்கள். அம்மன் 16 கலைகளோடு பூரண பிரகாசமாக அருள்வதால், இங்கே பௌர்ணமி பூஜை மிகவும் சிறப்பானது. கண், காது, மூக்கு என்று உடல் உருக்கள் வாங்கிப்போட அது சம்பந்தமான நோய் தீருகிறது. மருத்துவம் கைவிட்ட உடல்நலனை, இந்த அன்னை கைதூக்கி விடுகிறாள். இத்தலம் பரசுராமர் உருவாக்கிய 108 துர்க்கை தலங்களுள் ஒன்று. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூரிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது, வெட்டுவாணம்
No comments:
Post a Comment